சட்டவிரோத சிகரெட் கடத்தல்: ஒருவர் கைது

புத்தளம் நாகவில்லு பகுதியில் இன்று சனிக்கிழமை சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு சிகரெட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கெப்பெற்றதற்கமைய பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது புத்தளம் பாலாவி பகுதியினூடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்றினை நிறுத்தி சோதனைக்குட்படுத்தியபோது அதில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பொட்டலங்கள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட சிகரட் பெட்டிகளையும், அவற்றைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்