கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளி விழா

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளி விழா நேற்று வெள்ளிக்கிழமை கலாசாலையின் அதிபர் மெளலிசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கான பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் திரு பிரெட்லி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நான்கு சமயங்களைச் சேர்ந்த ஆசிரிய மாணவர்களும் இணைந்து ஒளிவிழா ஹரோல்கீதங்கள் நிகழ்வைச் சிறப்புறநடத்தினர். மறைக்கல்வியில் காட்டிய கிறிஸ்து என்னும் கருப்பொருளிலான சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இதில் ஆசிரியர்கலாசாலை மாணவர்கள்இ விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.