கோப்பாயில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது
-யாழ் நிருபர்-
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை ஐயாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பெண், பைகளில் கசிப்பினை சூட்சுமமாக பொதி செய்து விற்பனை செய்து வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.