கைத்தொலைபேசி மூலம் பண மோசடி : பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பணம் வழங்குவதாகக் தெரிவித்து கைத்தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) மற்றும் தொலைபேசி அழைப்புகளால் ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT), பொதுமக்களை எச்சரித்துள்ளது.

போலி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணத்தை மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மக்களுக்கு விடுத்துளள அறிவுறுத்தலில்

இவ்வாறு கைத்தொலைபேசிக்கு வரும் போலி செய்திகள் நீங்கள் பரிசுகளையும் பணத்தையும் வென்றுள்ளதாகக் கூறலாம், பல்வேறு தள்ளுபடிகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைகள் போன்றவற்றையும் உங்களுக்கு அனுப்பலாம்

இவ்வாறான நேரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்கவும், இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதையோ தவிர்த்து கொள்ளுங்கள், என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM