குளத்தில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு!

வாதுவ, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 19 மாத  குழந்தை ஒன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாயும், தந்தையும் வீட்டில் இருந்தபோது, ​​குழந்தை வீட்டின் முன் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகவும் சிறிது நேரத்திற்குப் பிறகு, குழந்தையை காணவில்லை என ​​தேடுதல் நடத்தப்பட்ட போது குழந்தை குளத்தில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM