குற்றப் புலனாய்வுப் பிரிவில் கெஹலிய ஆஜர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று புதன்கிழமை ஆஜராகியுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல ஆஜராகியுள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்வதில் ஆதரவாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர். பின்னர் கெஹலிய மற்றும் பல சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க