குடு சலிந்துவிற்கு பிடியாணை!
பிணையில் விடுவிக்கப்பட்ட “குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட போது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குடு சலிந்துவுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
ஆனால் அவர் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளனர்.
இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு குடு சலிந்துவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்