
கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா
-மூதூர் நிருபர்-
மூதூர் – கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவில் ஏராளமான சைவ பக்த அடியார்கள் பங்குபற்றியிருந்தனர். மேள முழகத்துடனும், பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் தேர் வலம் இடம்பெற்றது.
மூதூர் – கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் கடந்த 1 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று தேர் திருவிழா இடம்பெற்றது.
மேலும் நாளை வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று இரவு கொடியிறக்கம் இடம்பெற்று நாளை மறு தினம் சனிக்கிழமை பூங்காவனத் திருவிழாவுடன் வருடாந்த மகோஉற்சவம் நிறைவடைய உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்