காவி உடையில் திருவள்ளுவர் : வெடித்தது சர்ச்சை

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று வெள்ளிக் கிழமை திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. இந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இந்நிலையில். ஆளுநர் மாளிகை தரப்பில் தற்போது வெளியிடப்பட்ட அழைப்பிதழில் மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்