கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு கொட்டஹேனாவில் இரண்டு பெண்களை கடத்தி சென்ற காரை நோக்கி பொலிஸார் நேற்று சனிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கொட்டஹேனாவின் வாசல சாலையில் உள்ள உணவகத்தில் உணவு வாங்குவதற்காக காரை செலுத்தி சென்ற  நபர் காரின் இயக்கத்தை நிறுத்தாமல் உணவகத்திற்குள் சென்றுள்ளார்.

இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் குறித்த காரை கடத்த முயன்றுள்ளதுடன் காரில் கர்ப்பிணி பெண்ணும் தாயாரும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் குறித்த காரை துரத்தி சென்றுள்ளனர்.

மேலும் காரை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்தும் குறித்த காரை சந்தேக நபர் நிறுத்தாததால் காரை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காரை செலுத்தி சென்ற சந்தேக நபர் காரை விட்டு தப்பி சென்றதுடன் காரில் இருந்த இரண்டு பெண்களும் காயங்கள் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க