காத்தான்குடியை சேர்ந்த ஊடகவியலாளர் சஜீத் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கௌரவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பங்குபற்றுதலுடன் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபாட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் ஊடாக வெளிநாடு சென்று வெளிநாட்டில் பணிபுரிந்து மீண்டும் தாயகம் திரும்பி வந்து எமது நாட்டில் பலருக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உயர்நிலையில் உள்ளவர்களின் வெற்றிக் கதையை சிறப்பாக தொகுத்து வழங்கிய சக்தி தொலைக்காட்சியின் காத்தான்குடி பிராந்திய செய்தியாளர் எம்.எஸ். சஜீத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் சிறந்த வீடியோ தொகுப்புக்கான பாராட்டும் கௌரவிப்பும் பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்