காட்டெருமை தாக்கி வயோதிபர் காயம்

கந்தப்பளை -ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி வயோதிபர் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தை சேர்ந்த முனியன் கங்காணி (வயது – 84) என்பவரே இவ்வாறு காட்டெருமையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவில் நேற்று முன்தினம் நண்பகல் பிங்கந்தலாவை பகுதியிலிருந்து காட்டெருமை ஒன்று நகருக்கு திடீரென வந்துள்ளது. அந்த காட்டொருமையை விரட்டியடிக்க நகரில் சிலர் முற்பட்டுபோது குறித்த வயோதிபர் காட்டெருமையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலும்கு இலக்கான குறித்த வயோதிபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்