
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் : 05 பேர் பலி
காசாவின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் குடியிருப்புகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
பாலஸ்தீன ஏதிலிகளுக்கான உதவிகளை அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.