காசாவின் அகதிகள் முகாமை தாக்கிய இஸ்ரேல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது, இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஜபாலியா அகதிகள் முகாமையும் இஸ்ரேல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க பாதுகாப்பு கவுன்சில் கூடியபோது, இந்த தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், போரின் தீவிரத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போரை உலகம் தாங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்