கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினரின் ஒன்று கூடல்
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பிரபல்யமான கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2004 O/L மற்றும் 2007 A/L மாணவர்களின் ஒன்று கூடலானது 20 வருடங்களின் பின் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலை முன்றலில் நடைபெற்றது, அதன் பின்னர் அனைத்து நிகழ்வுகளும் பெரிய நீலாவனை M C Rest Inn மண்டபத்தில் இடம்பெற்றது, இதன் போது கடந்த கால பாடசாலை நினைவுகளை மீட்டுப் பார்க்கும் நேரமாகவும் அமைந்தது.
இதன்போது மறைந்த ஆசிரியர்கள் மற்றும் இவர்களோடு கல்வி கற்று மறைந்த நியோன் மற்றும் ரிப்னாஸ் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நோக்கில் ஒரு நிர்வாக ஒழுங்கமைப்பும் உருவாக்கப்பட்டது.
எதிர்காலத்தில் பாடசாலை மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் சிறப்பாக ஈடுபட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.
புதிய நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது அதன் படி
தலைவர்- சிந்துஜன்
செயலாளர்-சுரேஸ்
பொருளாளர்-ரசிதரன்
உப தலைவர்-தரணிதரன்
உப செயலாளர்-டனிஸ்கரன்
கணக்காய்வாளர்-குவைஸ்
கொழும்பு இணைப்பாளர்கள்-ரவுஷான் , அஸ்ரப்
மத்திய கிழக்கு இணைப்பாளர்கள்-நப்றிஸ் , அண்டனி
வெளி நாட்டு இணைப்பாளர்கள்- குமுதன் , சசி
நிர்வாக குழு உறுப்பினர்கள் -நிகாசன் , நிரூசன் , இர்ஷாத் , பிரசாத் , ஜீவன்
ஆகியோர் கடந்த 27.10.2024 அன்று தெரிவு செய்யப்பட்டனர்.