கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவஞ்சலி

 

இலங்கை தமிழ் கலைத்துறையில் மேடை நாடகத்தில் தொடங்கி உள்நாட்டு திரைப்படம் மற்றும் தென்னிந்தியா திரைப்படத்தில் முத்திரை பதித்த பிரபல கலைஞர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி கூட்டம் நாளை மறுதினம் 25.02.2024 மாலை 4மணிக்கு கொழும்பு பழைய நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்னாரின் நினைவாக இந்த நிகழ்ச்சியை கடந்த 44 ஆண்டுகளாக அவரது கலைஉலக வாரிசு கலைஞர் சண்முகராஜா நடத்தி வருகின்றனர்.

நம்நாட்டு கலைஞர்களின் திறமைகளை தென்னிந்தியக் கலைஞர்களும் அறியும் வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜசோழன் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் கலைப்பாலம் அமைத்தவர் கலைவேந்தன் ஸ்ரீசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்