கலாசார விளையாட்டு விழாவும் இசை நிகழ்ச்சியும்

மட்டக்களப்பு பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு கழகத்தின் 36ஆவது ஆண்டு நிறைவினையும், சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விளையாட்டு விழாவும், மாபெரும் இன்னிசை இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் ந.நிமல்றாஜ் தலைமையில் இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலை கலாசார விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் இன்னிசை இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் கல்வித்துறையில் சாதனை படைத்த சாதனையாளர்களை கௌரவித்திருந்ததோடு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்