கண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து: இருவர் பலி

கண்டி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவுல அரங்கல பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பெண் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியும், மகிழுந்தும் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நாவுல பகுதியைச் சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும், 64 வயது ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்