கண்டியில் வீடொன்று தீயில் கருகி நாசம்
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவ்வீடு கடும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்டுள்ள இத் தீ விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத் தீ விபத்தின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் பாரிய பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்