கணவருக்கு கல்யாணம் செய்து வைத்த மனைவிகள்

இந்தியாவில் ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவரின் வாழ்க்கையை அவரது வாழ்க்கைத் துணையாக பகிர்ந்து கொள்ள மேலும் இரண்டு பெண்கள் அனுமதி அளித்து வரவேற்பு கொடுத்த சம்பவம் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குல்லேலு கிராமத்தைச் சேர்ந்த சகேனி பாண்டண்ணா 2000ஆம் ஆண்டு பர்வதம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பர்வதம்மாவின் ஒப்புதலுடன் அப்பாலம்மா என்ற பெண்ணை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனவுடனேயே சகேனி பாண்டண்ணா – பர்வதம்மா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இரண்டு மனைவிகள், மகனுடன் வாழ்ந்து வந்த பாண்டனா, இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதனால் மேலும் ஒரு திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது இரண்டு மனைவிகளும் தங்கள் கணவருக்கு மூன்றாவது முறையாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

மேலும் ஜி.மாடுகுள மண்டலம் கில்லம்கோட்டா கிராமத்தில் உள்ள பந்தவீதியில் வசிக்கும் லவ்யா என்ற பெண்ணை தான் விரும்புவதாக பாண்டனா தனது இரண்டு மனைவிகளிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட இரண்டு மனைவிகளும் தனிப்பட்ட முறையில் மணமகள் வீட்டிற்குச் சென்று திருமணத்தைப் பற்றி பேசினர்.

லாவ்யாவும், அவரது பெற்றோரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பாண்டண்ணாவின் இரண்டு மனைவிகள் தங்கள் கணவரின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து தங்கள் பெயரில் திருமண அட்டைகளை அச்சிட்டனர். அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

ஜூன் 25, 2024 அன்று, மணமகளின் உறவினர்கள் மற்றும் பாண்டனாவின் ஏற்கனவே இருக்கும் மனைவிகள் மற்றும் மகன் உட்பட பாண்டனாவின் பெரிய குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தற்போது வைரலாகி வரும் நிலையில் பாண்டனா தனது மூன்று மனைவிகள் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்