கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வென்னப்புவ பிரதேசத்தில் கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக மனைவியின் உடலில் கணவன் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்