கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி?

 

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும்,  ஏற்றுமதிக்காக கஞ்சாவை பயிரிடுவது தொடர்பிலான யோசனை எதுவும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதை சட்டமாக்குவதற்கான சட்டமூலம் சுதேச வைத்திய அமைச்சர் சிசிர ஜயகொடியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது

எவ்வாறாயினும் அமைச்சரவையில் அவ்வாறான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்