ஓடையில் விழுந்து உயிரிழந்த பெண்

-பதுளை நிருபர்-

பதுளையில் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு முன் ஓடும் ஓடையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

கஹடகஹார, இடமெகெதர, கந்தேகெதர பகுதியை சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உறங்கி கொண்டிருந்த குறித்த பெண் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்து வீட்டின் கீழே ஓடும் ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.