
ஒளியைத் திண்ம நிலையாக மாற்றிய விஞ்ஞானிகள்
ஒளியைத் திண்ம நிலையாக மாற்றுதல் என்பது அறிவியல் ஆய்வுகளில் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
இந்தநிலையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சாலிட்” (Supersolid) எனப்படும் ஒரு அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்.
இது குவாண்டம் இயற்பியலில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் இது ஒரு பெரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு எனவும், எதிர்காலத்தில் இது பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும் கருதப்படுகின்றது.
மேலும் இதன் மூலம் ஒளியின் நடத்தைப் பற்றிய புதிய புரிதல்கள் கிடைக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.