ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கஹவத்தை, பனாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பொரளை பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தி, கஹவத்தை பகுதியில் உள்ள நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.