ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் சந்திப்பு

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!!!

-எஸ்.சினீஸ் கான்-

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் புதன்கிழமை  இடம்பெற்றது.

இதன்போது சமகால அரசியல் விவகாரம் தொடர்பாக முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி மற்றும் தற்போதைய நிலமைகள் சம்மந்தமாகவும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திற்கு உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜப்பான் நாட்டு தூதரக பிரதிநிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அல் – ஹிக்மா பவுண்டேசனின் தலைவர் இபாதுல்லாஹ் மௌலவி  கலந்து கொண்டார்.