
ஐபிஎல் வரலாற்றில் சாதனைபடைத்த மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது.
271 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 150 வெற்றிகளுடன் முதல் இடத்திலும், 248 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 வெற்றிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளன.
இதேவேளை ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 200க்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்