ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராராக தலதா அத்துகோரள நியமணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தலதா அத்துகோரளவை இந்தப் பதவிக்கு நியமித்தார்.
இந்தப் பதவியை முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார வகித்திருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்