
ஏதிலிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு
மத்திய காசாவில் உள்ள ஏதிலிகள் முகாமொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலும் ஹமாஸும் தமக்கு இடையிலான போரில் ஐந்து நாள் இடைநிறுத்தத்துக்கு இணங்க காசாவில் பணயக் கைதிகளாக உள்ளவர்களை விடுவிப்பதற்காக, அமெரிக்காவின் தலையீட்டுடன் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கைகள் ஆதாரமற்ற வதந்திகள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நிராகரித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், காசாவின் சில பகுதிகளில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே மோதல் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்