எல்ல விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்

-பதுளை நிருபர்-

எல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் சிறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளவாய வீதி எல்ல பகுதியில் அமைந்துள்ள மவுன்ட் ஹெவன் விடுதியை நோக்கி இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் விடுதியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்து தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் தொமன்வில மிட்டியாகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கி பிரயோகத்தில் இடது கை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகம் செய்த நபர்கள் ஸ்கூட்டி ரக உந்துருளியில் வந்தவர்கள் எனவும் T56 ரக துப்பாக்கியிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7 .45 மணியளவில் இடம்பெற்றுள்ளது

உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க