எல்லே போட்டியில் கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி அணி சம்பியன்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் 2025ஆம் ஆண்டுக்கான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் பெண்களுக்கான எல்லே போட்டி இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையும் புனித திரேசாள் பெண்கள் கல்லூரியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் புனித திரேசாள் பெண்கள் கல்லூரி அணி ஐந்துக்கு ஒன்று என்ற கணக்கில் கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையை வீழ்த்தி சம்பியனாகியது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க