“எல்லாம் சரியாக செய்ததால் விவாகரத்து செய்தேன்” – முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டு

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே மிகவும் சரியானவராக இருந்ததால் அவரை விவாகரத்து செய்ததாக முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.

காகா என அழைக்கப்பட்டும் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே தனது சிறுவயது தோழியும், காதலியுமான கரோலின் சிலிகோவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இருவரும் பிரிவதாக இந்த தம்பதி அறிவித்தனர்.

விவாகரத்து பெற்ற பின்னர் காகா கடந்த 2019ம் ஆண்டு பிரேசில் மாடல் அழகி கரோலினா டையாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதேபோல், கரோலின் சிலிகோ கடந்த 2021ம் ஆண்டு இடூர்டொ ஸ்கார்பா ஜூலியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறான நிலையில், தனது முன்னாள் கணவர் காகா மற்றும் விவாகரத்து தொடர்பில் கரோலின் சிலிகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

காகா எனக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. அவர் என்னை அன்பாக கவனித்துக்கொண்டார், அவர் எனக்கு சிறந்த குடும்பத்தை அளித்தார்.

ஆனால், எனக்கு மகிழ்ச்சியில்லை. ஏதோ ஒரு குறை இருந்தது. பிரச்சினை என்னவென்றால் எனக்கு காகா மிகவும் சரியானவராக இருந்தார். அதனால் விவாகரத்து செய்தேன்’ என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்