எங்களுக்கு ஆயுதம் தந்தது அநுரவின் கட்சி தான் : அந்த ஆயுதங்களை முதலில் அநுரகுமாரவை தேடி எடுக்க சொல்லுங்கள்!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்ததும் எங்களிடமிருந்து ஆயுதம் கைமாறியதும் அநுரகுமாரவின் கட்சி தான் எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பற்கான ஏற்பாடுகளை அநுரகுமார திஸாநாயக்கவை செய்ய சொல்லுங்கள் என இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமாக சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவரது கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போது ஆயுதக்குழுவான பிள்ளையான் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்கிறார் என குற்றம்சாட்டினார்

அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்திற்கு பதிளளிக்கும் வகையில் சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்