
எக்ஸ் தளம் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பயனர்கள் தளத்தின் முக்கிய அம்சங்களைப் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
எக்ஸ் தளத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் அரிய நிகழ்வாகும்.