ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், பரிசளிப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.
கல்லூரியின் அதிபர் அருட்திரு எம்.அன்ரன் அமலதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் திரு. ஜேசுதாசன் அமலேந்திரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்