
உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி
செல்லகதிர்காமம் தம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செல்லகதிர்காமம் தனமல்வில வீதியைச் சேர்ந்த திஸாநாயக்க ஆராச்சிகே சதுர நிரோத (வயது – 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றிச் செல்லப்பட்ட பெரிய உழவு இயந்திரத்தின் இடது சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சக்கரத்தை கழற்றி மாற்றும் உபகரணத்தை பயன்படுத்தி சக்கரத்தை மாற்றும் வேளையில் குறித்த உபகரணம் விலகி உழவு இயந்திரம் சாரதியின் மேல் கவிழ்ந்துள்ளது.
குறித்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.