உலகின் வயது முதிர்ந்த இரட்டையர் மரணம்

உலகின் வயது முதிர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற உலக சாதனையுடைய இரட்டையர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோரி மற்றும் ஜோர்ஜ் ஸப்பால் என்ற இரட்டையேரே இவ்வாறு தங்களது 62ஆவது வயதில் காலமாகியுள்ளனர்.

பென்சில்வேனிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த இருவரும் 30 ஆண்டுகளே உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் எதிர்வுகூறியிருந்த நிலையில், இருவரும் 62 வயது வரையில் உயிர் வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்