உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படுமா?
சீரற்ற காலநிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னர் வானிலை நிலைமைகளை மீளாய்வு செய்து பொருத்தமான நிலைமைகளைக் கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சையை மீண்டும் ஆரம்பிப்போம் என நம்புகின்றோம்.
அது குறித்த தகவல்கள் பரீட்சைகள் திணைக்களத்தால் உரிய நேரத்தில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.