
நாட்டின் பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்று புதன்கிழமை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும்.
அதேநேரம், இன்று நண்பகல் 12.12 அளவில் உயங்கல்ல, அரங்கல, கொன்கஹவெல, மொரகஹகந்த மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்