உணவு விஷமடைந்ததால் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், நாராயண்பேட் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலையில் இன்று வியாழக்கிழமை மதியம் வழங்கிய உணவு விஷமடைந்ததால் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
17 மாணவர்கள் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தெலுங்கானா மாநில முதல்வர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.