புதன் ஒரு ராசியில் 27 நாட்கள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் வருகிற செப்டம்பர் 04 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
சிம்ம ராசியானது சூரியனின் ராசியாகும். புதன் சூரியனின் ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் புதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். லாபத்தைப் பெற முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். பணியிடத்தில் நிதி விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் மனம் ஒருவித பதற்றத்துடனேயே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற பலர் முயற்சிக்கலாம். பணியிடத்தில் சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும். பரம்பரை சொத்து பிரச்சனையால் உறவில் விரிசல் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை அதிகரிக்கலாம்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மோசமாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெரிய செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நாட்டம் குறையலாம். இதனால் இலக்குகளை அடைய முடியாமல் அவதிப்பட நேரிடும். வியாபாரிகளுக்கு ஏற்றஇறக்கம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தை இழப்பார்கள். குடும்ப வாழ்க்கை பிரச்சனை நிறைந்ததாக இருக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்