
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் திருமலை பிரசார செயலாளராக ஜெயஸ்கரன் நியமனம்
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட பிரசார செயலாளராக பொன்னம்பலம் ஜெயஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கான நியமனத்தை நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கட்சியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் வழங்கி வைத்தார்.
இதன்போது ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் கமலச்சந்திரன் உட்பட கட்சியின் செயற்பாட்டாளர்களும் இணைந்திருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்