இ.போ.ச பேருந்து விபத்து : 36 மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்