இஸ்ரேலுக்குள் நுழைய ஐ.நா. பொதுச்செயலாளருக்கு தடை!
ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச்செயலாளர் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர், இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன.
இதனைச் செய்யாமல் மௌனம் காக்கும் எவருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்கத் தகுதி கிடையாது.
ஹமாஸ், ஹெஸ்புல்லா ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூறப்படுவார் எனவும், இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்