இலவச புலமைப்பரிசில் பயிற்சி நூல் வழங்கி வைப்பு!
திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழுழ் இலவசமாக கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களுக்கு இலவச புலமைப் பரிசில் பயிற்சி நூல் ASN நிறுவனத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நூல்களை ASN நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி மீரா, திரு.ஶ்ரீ தரன் கார்த்திகேசு மற்றும் அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் திரு.உதயகுமார் அஜித் குமார் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வின் போது அறநெறி பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பங்கு கொண்டனர். இந்த கல்வி நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இலவசமாக கல்வி கற்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்