இலங்கை – ரஷ்யா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுங்க நடவடிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பீ.பி.எஸ்.நோனிஸ் மற்றும் ரஷ்ய சுங்க சேவையின் பிரதானி வீ.ஐ.பிகலோவில் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகளின் போது சுங்க நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க வகையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதும் இந்த உடன்படிக்கையின் நோக்கமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.