இலங்கை மீண்டும் நெருக்கடிக்குள்ளாகலாம்: ரணில்

அனுபவம் வாய்ந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள உறுப்பினர்கள் இல்லை என்றும், எதிர்கால குழப்பங்களைத் தடுப்பதற்கு அறிவுள்ள தலைவர்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

“நான் முன்பு பாராளுமன்றத்தில் இருந்தேன், இப்போது எங்கள் குழுவிலிருந்து ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இவர்கள் மட்டுமே தற்போது நாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள்.” என்று அவர் தெரிவித்தார்.

தனது குழு மூன்று அல்லது நான்கு வருடங்கள் சேவையாற்றியதாகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் குறிப்பிட்ட அவர் புதிய பாராளுமன்றத்தில் மூத்த உறுப்பினர்கள் இல்லாதது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென ரணில் விக்கிரமசிங்க மேலும் எச்சரித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்