இலங்கையின் தேசிய அம்சங்கள்

இலங்கையின் அமைவிடம்

🌍உலகின் வட அகலக்கோடு 5° 55′ தொடக்கம் 9°51’வரையும், கிழக்கு நெடுங்கோடு 79°42′ தொடக்கம் 81°52′ வரையும் இலங்கை அமைந்துள்ளது.

இலங்கையின் பரப்பளவு
👉65 610சதுர Km

இலங்கையின் நீளம்
👉432Km (பருத்தித்துறை முதல் தெய்வேந்திர முனை வரை)

இலங்கையின் அகலம்
👉224Km (கொழும்பிலிருந்து சங்கமன்கந்த முனை வரை)

இலங்கையின் தேசிய அம்சங்கள்

இலங்கையின் தேசியக்கொடி
🏷️வாளேந்திய சிங்கம்

இலங்கையின் தேசிய கீதம்
🏷️”நமோ நமோ தாயே”

இலங்கையின் தேசிய மரம்
🏷️நாகமரம்

இலங்கையின் தேசிய மலர்
🏷️நீலோற்பலம் நீல அல்லி

இலங்கையின் தேசிய பறவை
🏷️காட்டுக்கோழி

இலங்கையின் தேசிய விலங்கு
🏷️மர அணில்

இலங்கையின் தேசிய உணவு
🏷️பாற்சோறு

இலங்கையின் தேசிய விளையாட்டு
🏷️கரப்பந்தாட்டம்

இலங்கையின் தனித்துவமான கலைப்படைப்பு எது?
🏷️சந்திர வட்டக்கல்

இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🏭தலவாக்கலை

இலங்கையின் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🏭அகலவத்தை

இலங்கையின் பருத்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🏭அம்பாந்தோட்டை

இலங்கையின் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🏭நாவின்ன

இலங்கையின் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் எவை?
1️⃣மகாஇலுப்பள்ளம
2️⃣இங்குராங்கொட
3️⃣பதல்கொட

இலங்கையின் சீனி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
🏭கந்தளாய்

இலங்கையில் காகித தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
🏭வாழைச்சேனை

இலங்கையில் பிரிமா மாவு ஆலை எங்கு அமைந்துள்ளது?
🏭திருகோணமலை

இலங்கையின் செய்மதி தொடர்பு நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🏭பாதுக்கை

இலங்கையில் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் எங்கு அமைந்துள்ளது?
🏭சப்புகஸ்கந்த

இலங்கையின் இயற்கை துறைமுகம் எது?
🏭திருகோணமலை

இலங்கையின் மீன்பிடி துறைமுகம் எது?
🏭திருகோணமலை

இலங்கையில் உயரமான நீர்வீழ்ச்சி எது?
🏭பம்பரக்கந்த நீர்வீழ்ச்சி

இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட குளம் எது?
🏭பசவக் குளம்

இலங்கையில் உள்ள பெரிய குளம் எது?
🏭சேனாநாயக்க சமுத்திரம்

இலங்கையில் மழைவீழ்ச்சி குறைந்த இடம் எது?
🏭மன்னார்

இலங்கையில் அதிக குளிர் கொண்ட பிரதேசம் எது?
🏭கந்தப்பளை

இலங்கையின் தேசிய கொடி விளக்கம்

சிங்கத்தின் முன் இரண்டு கால்கள் – தூய்மையான முறையில் செல்வ​த்தைக் கையாளல்

சிங்கத்தின் உடல் – வீரம்

சிங்கத்தின் வாள் – அநீதிக்கு எதிரான போராட்டம்

சிங்கத்தின் வாளின் பிடி – நீர், நெருப்பு, ஆகாயம், பூமி ஆகிய கூறுகள்

அரச இலைகள் நான்கு: அன்பு (மெத்தா) -ஒற்றுமையை பலப்படுத்தல், காருண்யம் (கருணா) -துன்பத்திலிருந்து மீட்சி பெறல்; மகிழ்ச்சி (முதிதா) – மற்றவர் மகிழ்ச்சியில் தானும் மகிழ்தல்; பற்றின்மை (உபேக்கா) – நன்மை, தீமை இரண்டையும் சமமாக மதித்தல் ஆகியவை ஆகும்.

சிவப்பு நிறம்: சமத்துவம் மிக்க சமுதாய அமைப்பினை உருவாக்குதல்.

மஞ்சள் நிறம்: அறிவு, சமாதானம், அஹிம்சை, சத்தியம், தர்மம் என்பவற்றை வெளிப்படுத்தல்.

செம்மஞ்சள் நிறம்: தமிழர்.

பச்சை நிறம்: முஸ்லிம்கள்

இவ்வாறாக, இலங்கையின் தேசிய கொடி பல அம்சங்களைத் தன்னகத்தே அடையாளங்களாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

1948ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதியன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. அன்று, இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் கொடி ஏற்றப்பட்டு, பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டமை, எமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.

இத்தனை சிறப்புவாய்ந்த தேசிய கொடியானது, ஒரு தேசிய தலைவரின் மரணம், இயற்கை அனர்த்தத்தால் ஏற்படும் மனித அழிவு போன்ற சம்பவங்களின் போது, தேசத்தின் சோகத்தைக் காண்பிக்கும் முகமாக, தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கொடியை பயன்படுத்திய பின்னர், அவற்றை மிகவும் பாதுகாப்பாக இறக்கி, நெறிப்படி மடித்து வைக்க வேண்டும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM