இலங்கை உலகத்துக்கு முன்னோடியான திட்டத்தை முன்னெடுத்துள்ளது

பொது மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டமானது உலகத்துக்கு முன்னோடியான திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற உறுமய காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முதற்கட்டமாக மகாவலி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்