இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு: தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவது தொடர்ந்தால் மக்களே ஒருமித்த அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

பூநகரி பொன்னாவெளி பகுதியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. உருத்திரபுரம் உருத்திரபுரீச்வரர் ஆலயம் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அனுமதியில்லாது இராணுவம் மேற்கொள்ளும் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் கரைச்சி பிரதேச சபைக்குச் சென்று அங்கு கரைச்சி பிரதேச செயலாளரிடம் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்